ஐஸ்வர்யா-பெனாசிர்?

By Staff

Aishwarya Rai
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் பெனாசிர் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சினிமா நடிகையான ஐஸ்வர்யா ராய், தற்போது உலக நாயகியாகி வருகிறார். இந்தி தவிர ஆங்கிலப் படங்களும் அவரைத் தேடி அலை மோதுகின்றன.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது. யுடிவி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் பெனாசிர் வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிப்பதற்கான அனுமதியைப் பெற பெனாசிர் குடும்பம் மற்றும் பாகிஸ்தான் அரசை யுடிவி அணுகியுள்ளதாம்.

அனைத்தும் முடிந்த பின்னர் படம் குறித்த முழுமையான தகவல்களை யுடிவி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் ஆகியோருடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள சர்க்கார் ராஜ் ரிலீஸாகியுள்ளது ஐஸ்வர்யா ராயை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

சர்க்கார் ராஜ் படத்தை முடித்து விட்ட ஐஸ்வர்யா அடுத்து ஷங்கரின் ரோபோட் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X