அம்ரீ்ஷ்பூரியின் கவர்ச்சி பேத்தி!

By Staff

Arthi Puri
மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ் பூரியின் பேத்தி ஆர்த்தி பூரி, தெலுங்கில் நடிக்க வந்திருக்கிறார். முதல் படத்திலேயே கிளாமரில் கலக்கியிருக்கிறாராம். தமிழ் என்ட்ரியையும் மனதின் ஒரு ஓரம் போட்டு வைத்திருக்கிறாராம்.

இந்தித் திரையுலகை ஒரு காலத்தில் கலக்கியவர் அம்ரீஷ் பூரி. வில்லனாகவும், குணச்சித்திர கேரக்டரிலும் கலக்கிய அம்ரீஷ் பூரி தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தளபதி, பாபா ஆகிய படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் வந்து பயமுறுத்தியவர்.

இந்த நிலையில் அவரது வழியில் அவரது பேத்தி ஆர்த்தி பூரியும் நடிக்க வந்துள்ளார். தமிழில் அல்ல - தெலுங்கில்.

அம்ரீஷ் பூரி தெலுங்கிலும் நடித்தவர் ஜெகதக வீருடு அதிலோக சுந்தரி, அக்காரி போராட்டம், கொண்ட வீதி டொங்கா ஆகியவை அவர் நடித்த தெலுங்குப் படங்கள்.

இந்த வரிசையி்ல இப்போது அம்ரீஷின் பேத்தி ஆர்த்தி பூரியும் தெலுங்கில் காலெடுத்து வைத்துள்ளார்.

ரமேஷ் நுதலபதி இயக்கி, ராம்பாபு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 8ம் தேதி ராமநாயாடு ஸ்டுடியோவில் தொடங்கியது.

சஸ்பென்ஸ் திரில்லப் படமான இதில், கிளாமர் போர்ஷனில் ஆர்த்தி பூரி கலக்கியிருக்கிறாராம். பிரம்மாஜி என்பவர்தான் நாயகனாக நடிக்கிறார். படத்தின் முதல் காட்சியை ஜீவிதா ராஜசேகர் இயக்கினார்.

ஆர்த்தி பூரி தெலுங்கில் அறிமுகமானாலும் கூட தமிழிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். தெலுங்கில் முத்திரை பதித்த பின்னர் தமிழ் பக்கம் பார்வையைத் திருப்ப திட்டமிட்டுள்ளாராம்.

ஆரத்தி எடுத்து வரவேற்க ரெடி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X