ஆவாராதான் உலகிலேயே சிறந்த படம்-பிரிட்டன் சினிமா நிபுணர்

தினா செயின்ட் ஆண்ட்ரூஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். திரைப்படங்கள் குறித் ஆய்வில் இங்கிலாந்தில் புகழ் பெற்றவர். அவர் கூறுகையில், உலகின் மிகச் சிறந்த பாப்புலர் படம் எது என்று கேட்டால் அப்போட்டியில் முன்னணியில் நிற்கும் படம் ஆவாராதான் என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், உலகில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட படம் ஆவாராதான் என்றும் தினா கூறியுள்ளார். ராஜ்கபூர் நடித்த முத்திரைப் படங்களில் ஒன்றுதான் ஆவாரா.
தெற்காசிய பாப்புலர் சினிமா என்ற இதழில் தினா எழுதியுள்ள கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இதழில், பல்வேறு நாடுகளிலும் இந்திய திரைப்படங்கள் எந்த அளவுக்கு பார்க்கப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன என்ற ஆய்வுக் கட்டுரையையும் தினா எழுதியுள்ளார்.
கிரீஸ், பல்கேரியா, ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் இதுதொடர்பாக சர்வேயையும் தினா எடுத்துள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு அடுத்து பல்வேறு உலக நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தினா கூறியுள்ளார்.
தினாவுடன், கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர் டிமிட்ரிஸ் எலிதெரோட்டிஸ் என்பவரும் இந்த ஆய்வில் பங்கு கொண்டுள்ளார். இருவரும் ஆவாராவை வெகுவாக புகழ்ந்துள்ளனர்.
ஆவாரா படம் பல்கேரிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











