twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தத் மனைவி மான்யதாவுக்கு எம்.பி. சீட்!

    By Staff
    |

    Sanjay and Manyata
    சஞ்சய் தத் போட்டியிடாவிட்டால் அவரது மனைவி மான்யதா போட்டியிடுவார்: அமர்சிங்

    டெல்லி: நடிகர் சஞ்சய் தத் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி தராவிட்டால், அவருக்குப் பதில் அவருடைய மனைவி மான்யதா போட்டியிடுவார் என சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் காமெடிகள் தொடங்கி விட்டன. தேர்தல் எப்போது என்றே இன்னும் தெரியாத நிலையில் குத்துமதிப்பாக ஒரு காலத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், சமாஜ்வாடிக் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. உ.பி. மாநிலத்திற்கான 17 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் அமர்சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    நேற்று முன்தினம்தான் நடிகர் சஞ்சய்தத் லக்னோ தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார் அமர்சிங். ஆனால் சஞ்சய் தத், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி, தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் தேர்தலில் போட்டியிடுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் அமர்சிங்கிடம் கேட்டபோது, சஞ்சய்தத் போட்டியிட முடியாவிட்டால் அவரது மனைவி மான்யதா போட்டியிடுவார் என்று கூறி அதிரடித்தார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், மான்யதாவை லக்னோ தொகுதியில் போட்டியிட அனுமதிக்குமாரு தத் குடும்பத்தை கேட்டுக் கொள்வோம்.

    சஞ்சய் தத் போட்டியிட்டால் அதை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கும். ஏனென்றால் சஞ்சய் தத்தின் தங்கச்சி பிரியா தத் காங்கிரஸ் எம்.பி. எனவேதான் சஞ்சய் தத்தை வேட்பாளராக தேர்வு செய்தோம்.

    தத் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவருடைய தந்தை சுனில்தத் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அவருடைய தாயார் நர்கீஸ் தத் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர். இருவரும் பிரபல நடிகர்களும் கூட.

    எனவே சஞ்சய் தத் போட்டியிட வேண்டும். ஒரு வேளை இதற்கு உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவைப்பட்டால், சட்ட பிரச்சினை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வோம்.

    ஒருவேளை அங்கும் அனுமதி கிடைக்காவிட்டால் சஞ்சய் தத்தை பிரசாரத்தில் ஈடுபடுத்துவோம். மான்யதாவை வேட்பாளராக நிறுத்துவோம் என்றார்.

    வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொகுதி லக்னோ என்பது குறிப்பிடத்தக்கது. பழுத்த அரசியல் தலைவரான வாஜ்பாய் இந்தத் தொகுதியின் எம்.பி.ஆவார்.

    இப்படிப்பட்ட தொகுதிக்கு அரசியலில் கொஞ்சம் கூட அனுபவமே இல்லாத மான்யதாவை வேட்பாளராக்குவோம் என அமர்சிங் கூறியுள்ளது அரசியல் களத்தை சலசலப்புக்குள்ளாக்கியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X