வங்கி கடன்: ஏலத்திற்கு வரும் ராம்கி-நிரோஷா வீடுகள்

By Staff

Nirosha and Ramki
வாங்கிய வங்கிக் கடனை கட்ட முடியாததால், நடிகர் ராம்கி- நிரோஷாவுக்குச் சொந்தமான இரு ஃபிளாட்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே படத்தில் ஜோடியாக நடித்தவர் ராம்கியும், நிரோஷாவும். இதையடுத்து மேலும் சில படங்களிலும் ஜோடியாக நடித்தனர். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

காதலர்களாக இருந்த இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து நியூ லைன்ஸ் பிசினஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இதற்காக தங்களுக்குச் சொந்தமான, சென்னை அண்ணாசாலை ஜெமினி பார்சன் அபார்ட்மென்டில் உள்ள 2500 சதுர அடி வீட்டையும், அதே அபார்ட்மென்டில் உள்ள 432 சதுர அடி வீட்டையும் ஜெமினி சர்க்கிளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் அடமானம் வைத்து கடன் வாங்கினர்.

ஆனால் தொழில் சரியாகப் போகாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் வங்கிக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து அடமானம் வைத்த சொத்துக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியது.

தற்போது இருவரும் சேர்ந்து வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 628 ரூபாய் என வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தத் தொகையை வசூலிப்பதற்காக இரு வீடுகளையும் ஏலம் விடுகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 2500 சதுர அடி வீட்டின் குறைந்த பட்ச கேட்பு தொகையாக ரூ.2 கோடியே 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

432 சதுர அடி குடியிருப்பின் குறைந்த கேட்பு தொகை ரூ.28 லட்சமாக நிர்ணயித்துள்ளனர். மார்ச் 10ம் தேதி ஜெமினி சர்க்கிளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இந்த இரு வீடுகளும் ஏலம் விடப்படவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X