ஜெயம்கொண்டான் ஆடியோ ரிலீஸ்

வினய், பாவனா, லேகா வாஷிங்டன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயம்கொண்டான். சத்யா மூவிஸ், சத்யஜோதி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சத்யம் சினிமாஸ் வளாகத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் இரு பாடல்கள் போட்டுக் காட்டப்பட்டன. பின்னர் ஆடியோ வெளியீடு நடந்தது. கமல்ஹாசன் முதல் சிடியை வெளியிட அதை மணிரத்தினம் பெற்றுக் கொண்டார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், கே.ஆர்.ஜி, சரத்குமார், அபிராமி ராமநாதன், கலைப்புலி சேகரன், ஜெயம் ரவி, பாவனா, லேகா வாஷிங்ட்ன், வினய் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பாவனாவும் இந்த விழாவில் பங்கேற்றார். அவர் நடித்த படத்தின் ஆடியோ விழாவில் அவர் பங்கேற்பது இதுதான் முதல் முறையாம்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், ஆர்.எம்.வீரப்பன், டி.ஜி.தியாகராஜன் போன்ற தயாரிப்பாளர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். எதிர் வரும் தலைமுறையினர் அவர்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு ஆர்.எம். வீரப்பன் புகழாரம் சூட்டினார். அவரைப் போன்ற ஒழுக்க சீலரான தயாரிப்பாளரை இப்போது பார்ப்பது மிகவும் அரிது என்றார் ஆர்.எம்.வீ.
ஜெயம் ரவி பேசுகையில், கமல்ஹாசன் போன்ற மாபெரும் நடிகர், மணிரத்தினம் போன்ற மாபெரும் இயக்குநருடன் ஒரே மேடையில் அமருவது மிகவும் பெருமையாக உள்ளது. மணிரத்தினத்தின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் பார்த்து நான் என்னை நிறைய மாற்றிக் கொண்டுள்ளேன்.
ஒவ்வொரு நடிகரும், மணிரத்தினத்திடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











