கந்தசாமி மீண்டும் தள்ளி்ப் போடப்பட்டது

By Staff

Vikram with Shreya Saran in Kandasamy
எதிர்பார்த்த மாதிரியே மீண்டும் ஒரு முறை தள்ளிப் போய் விட்டது விக்ரம் நடிப்பில் சுசி கணேசன் உருவாக்கியுள்ள கந்தசாமி.

இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியே வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உறுதியாகக் கூறினார். ஆனால் திடீரென்று அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்.

காரணம் இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் முழுமை பெறவில்லையாம்.

'ஆனால் ஆகஸ்ட் 21-ம் தேதி படத்தை வெளியிட்டு விடுவோம். இது 200 சதவிகிதம் உறுதி. இத்தனை நாள் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் ஓரிரு வாரங்கள் காத்திருப்பதில் தவறில்லை..' என்கிறார் தாணு.

உலகமெங்கும் 1000 பிரிண்டுகளுடன் வெளியாகவிருக்கும் கந்தசாமி, சென்னையில் மட்டும் 20 திரையரங்களில் திரையிடப்பட உள்ளது.

விக்ரம் - ஸ்ரேயா நடித்துள்ள இந்தப் படத்தின் பெரும்பகுதி மெக்ஸிகோவில் படமாக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் கந்தசாமியின் பிரிண்டுகளைத் திரையிடுகிறது அந்நாட்டு அரசின் சலாசாரப் பிரிவு.

படத்தின் தயாரிப்பாளர் தாணு, மெக்ஸிகோ நாட்டின் கவுரவத் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X