வெள்ளம்-உதவும் கன்னட திரையுலகம்
கர்நாடகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கன்னடத் திரையுலகினர் முன்வந்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட வட கர்நாடக மாவட்டங்களில் தவித்து வருவோருக்கு உதவ நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் முன்வந்துள்ளனராம்.
நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான புனீத் ராஜ்குமார் ரூ. 5 லட்சம் நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இவர் தவிர ஏராளமான கலைஞர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனராம்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளிக்கப்படும் என அதன் தலைவர் ஜெயமாலா கூறியுள்ளார்.
நடிகை தாராவும், நடிகர் சீனிவாசமூர்த்தியும் பெங்களூரில் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் நிதி திரட்டி அதை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











