»   »  காத்ரீனாவை அடித்தாரா சல்மான்?

காத்ரீனாவை அடித்தாரா சல்மான்?

Subscribe to Oneindia Tamil
Katrina Kaif with Salman Khan
மும்பையில் உள்ள காபி ஷாப்பில் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு காதலி காத்ரீனா கைப்பை, சல்மான் கான் பளாரென அடித்து விட்டதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் அதை காத்ரீனா மறுத்துள்ளார்.

பாலிவுட் ஹாட் ஸ்டார் காத்ரீனா கைபும், காதல் நாயகன் சல்மான் கானும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இது உலகறிந்த விஷயம். ஆனால் சமீபத்தில், காத்ரீனாவை கை நீட்டி சல்மான் அடித்து விட்டதாக ஒரு செய்தி பாலிவுட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த சம்பவத்தை காத்ரீனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் யாருடனும் விவாதிக்க மாட்டேன். விவாதித்ததும் இல்லை. பெர்சனல் என்பது பெர்சனல்தான். அதில் யாரும் தலையிட முடியாது, கூடாது.

என்னை சல்மான் கான் அடித்து விட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கற்பனையானவை, சுத்த முட்டாள்தனமான செய்தி. எல்லை மீறிய செய்தி இது.

சில விஷமிகள் வேண்டும் என்றே பரப்பி விட்ட செய்தியாக இதைக் கருதுகிறேன். இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

நான் எந்த வதந்திக்கும் விளக்கம் தர விரும்ப மாட்டேன். ஆனால் சில விஷங்களில் அப்படி மெளனம் காக்க முடியாது என்று கூறியுள்ளார் காத்ரீனா.

காத்ரீனா இதுவரை தன்னைப் பற்றி வந்த எந்த வதந்திக்கும் பதில் அளித்ததே கிடையாது. இதுதான் அவர் முதல் முறையாக மறுப்பு வெளியிட்டது என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

அதுவும் கூட சல்மான் கான் பெயரை இழுத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் காத்ரீனா மறுப்பு தெரிவித்துள்ளாராம். சல்மான் மீது அவ்வளவு மரியாதையும், நம்பிக்கையும் வைத்துள்ளார் காத்ரீனா. இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர் மிகவும் அப்செட் ஆகி விட்டார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

தனது திரையுலக வாழ்க்கை குறித்து காத்ரீனா கூறுகையில், முன்பை விட இப்போது எனது நடிப்புலக வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது. நான் நடித்துள்ள ரேஸ் என்ற படம் பிரமாதமாக வந்துள்ளது. சர்வதேச தரத்தில் வந்துள்ளது. அந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன் என்றார் காத்ரீனா.

அதேபோல சிங் இஸ் கிங், மெய்ன் யுவராஜ் மற்றும் யஷ்ராஜ் பிலிம்ஸின் இரு படங்களையும் அவர் ஆவலோடு எதிர்பார்த்துள்ளாராம்.

காத்ரீனா தமிழுக்கும் வருகிறார். அஜீத் நடிக்க, ராஜு சுந்தரம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் காத்ரீனாதான் நாயகி என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என்பது நினைவிருக்கலாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil