குட்டி ராஜா, ராணி 'பட்டாபிஷேகம்'!

தென்னிந்திய அழகிப் போட்டியை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருபவர்கள் மாயா ஈவன்ட்ஸ் நிறுவனத்தினர். பெரியவர்களுக்கான பேஷன் ஷோவைப் போலவே, சிறுவர் சிறுமிகளுக்கும் நடத்தினால் என்ன ஒரு எண்ணம் உதயமானதால் கிரிஷ் ஈவன்ட் மேனேஜ்மெண்டுடன் இணைந்து இந்த குட்டி ராஜா, குட்டி ராணி பட்டாபிஷேகம நிகழ்ச்சியை நேற்று சென்னையில் நடத்தினர்.
அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்க பள்ளி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 14 சிறுவர்களும் 12 சிறுமிகளும் பங்கேற்றனர்.
கலாச்சார சுற்று, திறமைச் சுற்று, விளம்பர நடிப்புச் சுற்று மற்றும் ராஜா ராணி சுற்று என நான்கு சுற்றுகளாக போட்டி நடந்தது. இறுதியில் சர்பேஸ் வெங்கட் எனும் சிறுவன் பட்டத்து ராஜாவாக தேர்வானார். ஆர் பி ராகுல் மேனன் 'இளைய ராஜாவாக' தேர்வு செய்யப்பட்டார்.
சிறுமிகளில் எஸ் திவ்யா பட்டத்து ராணியாகவும், கே காவ்யா இளைய ராணியாகவும் தேர்வானார்கள்.
இவர்களுக்கு நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் அசோக் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.
நடிகை ஷ்ராவ்யா, இயக்குநர் செல்வன், மாடலிங் துறையைச் சேர்ந்த பிரதீப், ஜேபிஆர் கல்லூரி இயக்குநர் ரெஜினா வில்சன், மாடலிங் பயிற்சியாளர் டாலு மற்றும் ஸ்டுடியோ 5 டான்ஸ் பயிற்சி மைய பயிற்சியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிஆர்ஓ கோவிந்தராஜ் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications











