'நயனதாராவுக்கு அப்படியே கொடுக்கிறேன்'!

By Staff

Nayantara
நயன்தாராவுக்கு பேசிய சம்பளத் தொகையை கொஞ்சம் கூடக் குறைக்காமல் அப்படியே தருகிறோம் என்று கூறியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.

ஜெயம் ரவி-பாவனா நடித்த தீபாவளி படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது. மிக பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரித்து வருகிறது.

இதில் பருத்தி வீரன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்தப் படத்துக்கு ரூ.1.25 கோடி வரை நயனதாரா சம்பளமாகக் கேட்டார். ஆனால் இறுதியில் ரூ.1.10 கோடி தருவதாக இயக்குநர் லிங்குசாமி ஒப்பக் கொண்டார். அட்வான்ஸாக பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இடையில், நயனதாராவின் இரு படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் பேசிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு மறுத்துவிட்ட நயனதாரா, பேசிய தொகையைக் கொடுக்காவிட்டால் படத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும் கூறிவிட்டார். ஆனால், அட்வான்ஸை திருப்பித் தரமாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.

நயனதாராவின் பிடிவாதத்தைப் பார்த்த இயக்குநர் லிங்குசாமியும் அவரது சகோதரர் போஸும் பேசியபடி சம்பளத்தைக் கொடுத்து விடுவதாக்க் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:

எங்கள் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நயனதாராதான் கதாநாயகி. அவருக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அவருடைய சம்பளத்தை குறைக்கவில்லை. அந்த்த் தொகை எவ்வளவு என்பதெல்லாம் வெளியில் கூற முடியாது.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. திட்டமிட்டபடி, அக்டோபர் முதல் வாரத்தில் மும்பையில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள்.

எப்படியோ நயனதாரா சம்பளம் எவ்வளவென்று 'தெரிய வேண்டியவர்களுக்கு'த் தெரிந்துவிட்டது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X