குழந்தைகள் பட விழாவில் பாண்டியராஜன் படம்

இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் சமீபத்தில் இரு துளிகள் எனும் குறும்படம் ஒன்றைய இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஸ்வின்குமார் என்ற சிறுவனுடன் பாண்டியராஜனும் நடித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 7ம் தேதி உத்தரப் பிரேதச தலைநகர் லக்னோவில் நடக்கும் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
போலியோ நோய்க்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பாண்டியராஜன்.
எத்தனையோ கமர்ஷியல் ஹிட் கொடுத்திருந்தாலும் அவற்றில் கிடைக்காத தனி கவன ஈர்ப்பும், திருப்தியும் இந்தப் படத்தில் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் பாண்டியராஜன்.
Comments
இரு துளிகள் குழந்தைகள் படவிழா சினிமா தமிழ் பாண்டியராஜன் லக்னோ children film festival cinema iru thuligal


Click it and Unblock the Notifications