தொடங்கியது பொக்கிஷம் ஷூட்டிங்

சேரன் இயக்கி வெளிவந்த ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் இது. பத்மப்ரியா, உதயதாரா நாயகிகளாக நடிக்கின்றனர். இன்னும் இரு நாயகிகளும் நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
திருமணத்துக்குப் பிந்தைய இனிய மலரும் நினைவுகளின் தொகுப்பாக இந்தப் படத்தை உருவாக்குகிறார் சேரன். படத்தின் தலைப்பே- 'பொக்கிஷம், நீ எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்'- பாதிக் கதையைச் சொல்லிவிடுவது போல் கவிதையாய் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நான் அவனில்லை, அஞ்சாதே வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிச்சந்த் ஜெபக்-ஹித்தேஷ் ஹபக். ஆனால் இம்முறை இவர்கள் நேரடியாக தயாரிப்பில் ஈடுபடவில்லை. முதல் பிரதி அடிப்படையில் சேரன் இயக்கித் தருவதால், பட்ஜெட் தொகையை முழுவதுமாக அவரிடமே ஒப்படைத்துவிட்டார்கள் (இதில் ஒரு பகுதிதான் நேற்று வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளானது).
இந்தப் படத்துக்காக ஆட்டோகிராபில் நடித்த கோபிகா, ஸ்னேகா ஆகிய நடிகைகளை எவ்வளவோ கேட்டும் அவர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டனர்.
அதனால் தனது ஆஸ்தான நாயகியான பத்மப்பிரியா மற்றும் கண்ணும் கண்ணும் நாயகி உதயதாராவிடம் போய்விட்டார் சேரன்.
என்ன செய்வது, இந்த பச்சைத் தமிழனுக்கு அவ்வப்போது மலையாளம்தான் கைகொடுக்கிறது!


Click it and Unblock the Notifications











