ரம்லத் விவகாரத்தால் உஷார்... பிரகாஷ் ராஜை வற்புறுத்தி திருமணத்தை பதிவு செய்த போனி வர்மா!!

By Chakra

Poney Varma and Prakash Raj
வெறும் காதல் மட்டுமே போதும் என்று கண்மூடித்தனமாக யாரும் இருப்பதில்லை. காதலிக்கும்போதும் சரி, கல்யாணமான பிறகும் சரி, உஷாராக இல்லாவிட்டால் மூக்கை உறிஞ்சிக்கொண்டுதான் காலம் கழிக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளனர் பெண்கள்.

அதற்கு ஒரு உதாரணம் வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி போனி வர்மா.

இருவரும் காதலித்தார்கள். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, முதல் மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்தால்தான் திருமணம் என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டாராம். விளைவு, காதலித்து மணந்த லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டார் பிரகாஷ் ராஜ்.

உடனடியாக பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குநர் போனி வர்மாவுக்கும் ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் இருவரும் குடியேறினார்கள். திருமணம் பதிவு செய்யப்படாமல் இருந்தது. மனைவி போனி வர்மா திருமணத்தை பதிவு செய்யுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் அப்போது அலட்சியமாக இருந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

இதற்கிடையே, பிரபுதேவா, தன் மனைவி ரம்லத்தை பிரிந்துள்ளார். இவர்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே திருமணம் செல்லாது என கோர்ட்டில் வாதிட அவர் தயாராகி வருகிறார்.

பிரபுதேவாவை நன்கு அறிந்தவரான போனி வர்மாவுக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது. பிரகாஷ் ராஜும் பிரபு தேவாவும் நெருக்கமான நண்பர்கள் வறு.

இதனால் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவேண்டும் என்று வற்புறுத்தினாராம் போனி வர்மா. இதற்கு பிரகாஷ்ராஜும் சம்மதித்தார்.ஹைதராபாத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தார். அப்போது வீட்டு டெலிபோன் பில் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்தார். திருமணப் புகைப் படங்களையும் சமர்ப்பித்தார். மூன்று பேரை அழைத்து வந்து சாட்சி கையெழுத்தும் போட வைத்தார் பிரகாஷ் ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X