தனித்தனியாக வந்து ஒன்றாய்ச் சேர்ந்து பூஜை செய்த நயனதாரா-பிரபு தேவா!!

இந்தப் பூஜைக்கு இருவரும் தனித்தனியாக வந்தனர். கோயிலுக்கு வந்தபிறகு ஜோடியாக சேர்ந்து பூஜை செய்தனர்.
தடைகள் நீங்க, நினைத்தது கை கூட காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். இந்தப் பூஜையை, கள்ளக்காதல் சிக்கலில் சிக்கித் தவிக்கும் பிரபு தேவா - நயன்தாராவும் நேற்று செய்தனர்.
ஹைதராபாதில் தங்கியிருக்கும் இருவரும் காளஹஸ்திக்கு தனித்தனியாகவே வந்தனர். இருவரும் சேர்ந்து சுற்றக் கூடாது என ரம்லத் வழக்கு தொடர்ந்திருப்பதால் இப்படி எச்சரிக்கையுடன் வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
பின்னர் கோயில் இருவர் பெயரிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. இருவரும் நீண்ட நேரம் கோயிலில் இருந்து சாமி கும்பிட்டனர். பின்னர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
கள்ளக்காதலுக்கும் கடவுள் அருள் கிடைக்குமா என்பது தெரியவில்லை!
Comments
காளஹஸ்தி கோயில் சிறப்புப் பூஜை நயன்தாரா பிரபு தேவா kalahasthi temple nayanthara pabhju deva special puja


Click it and Unblock the Notifications