கொழும்பு விழாவுக்கு ராவணன் போகலை!-மணிரத்னம்

தனித்து வாழும் பெண்கள் தொடர்பாக 'நாம்' என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் மனைவி சுஹாஸினியுடன் பங்கேற்ற மணிரத்னம் பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "ராவணன் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து கொண்டுள்ளன. இன்னும் படம் முடியவில்லை. எனவே கொழும்பு விழாவில் பங்கேற்பது குறித்த கேள்வியே அவசியமற்றது.
நான் பங்கேற்கவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் பங்கேற்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை", என்றார்.
"ஐஸ்வர்யா ராய் உங்கள் படத்தின் நாயகிதானே.. அவர் பங்கேற்கிறாரா... அவர் பங்கேற்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளனவே?" என நிருபர்கள் கேட்டனர்.
உடனே மணிரத்னம், "ஐஸ்வர்யா ராயை நான் கட்டுப்படுத்த முடியாது. பங்கேற்பதும் பங்கேற்காமல் இருப்பதும் அவர் விருப்பம்", என்றார்.


Click it and Unblock the Notifications











