பசுபதிக்கு ரஜினி பாராட்டு

மலையாளத்து கத பறயும்போள் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கான குசேலன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது பிரசாத்லேப்ஸில் படத்துக்கான டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
குசேலனுக்குரிய தனது பகுதிக்கான டப்பிங்கை மூன்றே நாட்களில் முடித்துக் கொடுத்து விட்டார் ரஜினி. டப்பிங் பேசி முடித்த பின்னர், படத்தை சிறந்த முறையில் இயக்கியுள்ளதாக இயக்குநர் பி.வாசுவை வெகுவாக பாராட்டினாராம் ரஜினி.
அதேபோல ரஜினியிடம் பாராட்டுப் பெற்றவர், படத்தில் அவருடைய நண்பராக நடித்துள்ள பசுபதி.
ரஜினி, பசுபதி தவிர நயனதாரா, வடிவேலு, மீனா உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் குவியலே படத்தில் நடித்துள்ளது.
ஜூலை மத்தியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படம் திரைக்கு வரும் என்று ெதரிகிறது. ஜூன் 25ம் தேதி ஆடியோ வெளியிடப்படவுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications