'குதிரை' ரமணா!

விஜய்யின் முதல் ஆக்ஷன் படம் திருமலை. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய்யின் ரேஞ்சே மாறிப் போய் விட்டது. அந்த மாற்றத்தைக் கொடுத்தவர்தான் ரமணா. அப்படத்திற்குப் பின்னர் சுள்ளான், ஆதி என ஆக்ஷன் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த ரமணா இயக்கத்திற்கு பிரேக் விட்டு விட்டு ஹீரோவாகி விட்டார்.
ரமணாவின் உதவியாளரான ரா.ராஜசேகர்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு குதிரை என பெயரிட்டுள்ளனர். முதலில் வேறு ஹீரோவைத்தான் தேடி வந்தார் ராஜசேசகர். ஆனால் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து சிஷ்யரின் நிலையை உணர்ந்த ரமணா, தானே ஹீரோவாகி விட முடிவெடுத்தார். இப்படித்தான் குதிரை நாயகனானார் ரமணா.
இது வழக்கமான கதையாக இல்லாமல், சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார் ரமணா. படத்தின் நாயகனான சூர்யா கேரக்டரை மூன்று விதமான கோணங்களில் காட்டுகிறோம்.
3 நிமிடங்கள் 15 விநாடிகள் வரும் ஹீரோவின் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு காட்சியை ஒரே டேக்கில் எடுத்துள்ளோம் என்கிறார் ரா.ராஜசேகர்.
சிஷ்யர் குறித்து ரமணா கூறுகையில், நான் கமர்ஷியல் படங்கள் செய்து கொண்டிருந்தபோது எனக்கு பெரும் உதவியாக இருந்தார் ராஜசேகர். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியாது.
பல காட்சிகளில் சில ஆலோசனைகளைக் கூறலாம் என நான் நினைத்ததுண்டு. ஆனால் அதை அப்படியே மறைத்துக் கொண்டு நடிகராக மட்டும் இப்படத்தில் பங்காற்றி வருகிறேன் என்கிறார் ரமணா.
படத்தின் பல காட்சிகளை ஷூட் செய்து முடித்து விட்டனராம். இன்னும் ஒரு பாடல் காட்சி பாக்கி இருக்கிறதாம். ராஜஸ்தானில் போய் விரைவில் சுடவுள்ளனர்.
படத்தில் ரமணாவுடன், பிரகாஷ் ராஜ், வினீத், இளவரசு, லலிதா ஆகியோரும் உள்ளனராம்.


Click it and Unblock the Notifications











