ரமணாவும் இப்போ ஹீரோதான்!

By Staff

Ramana with Charan and Agathiyan
இதோ அதோ என ஹீரோ அரங்கேற்றத்துக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இயக்குநர் ரமணாவும் களத்தில் குதித்தே விட்டார்.

குதிரை எனும் படத்தின் மூலம் தானும் ரேஸூக்குத் தயார் என சிலுப்புகிரார் மனிதர்.

விஜய்க்கு பெரும் திருப்புமுனையைத் தந்த திருமலை, பெரும் சரிவைத் தந்த ஆதி இரண்டு படங்களையுமே இயக்கியவர் ரமணாதான். அதே போல தனுஷை 'நிதானத்'துக்குக் கொண்டு வந்த சுள்ளான் படத்தையும் அவர்தான் இயக்கினார்.

ஆதிக்குப் பிறகு விஜய்க்கு மீண்டும் ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தார். பல நாட்களாகக் காத்திருந்தும், விஜய் அந்தக் கதையைக் கேட்கவே தயாராக இல்லை. (ஆதியில் பட்ட அடி சும்மாவா...)

கடைசியில் அந்தக் கதையில் தானே நடித்துவிட முடிவு செய்த ரமணா, தன் அஸோசியேட்டிடம் அதே கதையை தனக்கேற்ற மாதிரி திரைக்கதை அமைத்து இயக்கும்படி கூறிவிட்டார்.

ரமணாவின் நல்ல நேரம், கதையைக் கேட்ட நடிகர் நாசர், தானே தயாரிப்பதாக ஒப்புக் கொண்டார்.

பிரைட்டி எனும் கேரளத்துப் புதுமுகம்தான் இந்தப் படத்தில் ரமணாவின் ஜோடியாக நடிக்கிறார். சபோஷ் முரளி இசையமக்க, நடிகை காவேரி விவகாரத்தில் இப்போதுதான் கரையொதுங்கியிருக்கும் வைத்தி இந்தப் படத்தக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

வாழ்க்கையில் ஒரு நல்ல 'பிரேக்' தேவைப்படும் பலர் ஒன்று சேர்ந்திருக்கும் படம் இது. ஜெயிச்சா சந்தோஷம்தான்‍!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X