கரோலின்-ரஞ்சித்தின் ரயிலு!

By Staff

Caroline with Ranjith
நல்ல கதைகளுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதே இன்றைக்கு கஷ்டமாக உள்ளது என்கிறார்
ரயிலு என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் ரஞ்சித்.

மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கத்தில் வெளியான பட்ம் 'சல்லாபம்'. இதைத்தான் தமிழில் 'ரயிலு' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ரஞ்சித். ஏ.கே. மீடியா விஷன் என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

திரைக்கதை, வசனம் எழுதி ரஞ்சித் இயக்குகிறார்.

படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

'சல்லாபம்' படம் தெலுங்கில் 'எகிரே பாவுரம்மா' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது தமிழுக்கேற்ப மாற்றி, 'ரயிலு' என்ற பெயரில் இயக்கி நடிக்கிறேன்.

இந்தக் கதையைத் தேர்வு செய்த தயாரிப்பாளர்களை மிகவும் பாராட்டுகிறேன்.

பொதுவாக நல்ல கதைகளுக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த தயாரிப்பாளர்கள் அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

எனது ஜோடி, புதுமுகம் கரோலின். இவர்களைத் தவிர யுவராணி, வினோத், இளவரசு உள்ளனர்.

இளைஞர்களையும், குடும்பத்தினரையும் தியேட்டருக்கு வந்து பார்க்க வைக்கும் யுக்திகளுடன் இப்படத்தை உருவாக்கி வருகிறேன். குடும்பப் பாங்கான கதைகள் என்றுமே தோற்றதில்லை. ரயிலு இதை மீண்டும் நிரூபிக்கும்.

'பீஷ்மர்' படத்துக்கு சிறப்பான விமர்சனங்கள் வந்தன. அதுபோல், 'ரயிலு' படமும் டைரக்ஷனில் என்னை தனியாக அடையாளப்படுத்தும். இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது என்றார் ரஞ்சித்

கோவை, மேட்டூர் என ஆரம்பித்து படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் ரஞ்சித். காதலர் தினத்தன்று படம் வெளியாகவுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X