சினிமாவாகும் சத்யஜித் ரே வாழ்க்கை!

'அபோஹோமான்" எனும் தலைப்பில் இந்தப் படத்தை எடுப்பவர் பிரபல வங்காள இயக்குனர் ரிதுபர்னோ கோஷ்.
இந்திய சினிமாவின் சர்வதேச முகமாகப் பார்க்கப்படுபவர் சத்யஜித் ரே. அவரது படங்கள் நல்ல படைப்பாளிகளுக்கு டிக்ஷ்னரி மாதிரி பார்க்கப்படுகிறது. அவரது வாழ்க்கையை 'அபோஹோமான்" என்ற பெயரில் இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் இயக்கி வருகிறார்.
சத்யஜித் ரே கேரக்டரில் நடிக்க அமிதாப் பச்சனிடம் முதலில் பேசினர். ஆனால் அவர் கால்ஷீட் ஒத்து வராததால் இப்போது தீபன்கர் தே என்பவர் நடித்து வருகிறார்.
சத்யஜித் ரே, அவரது மனைவி, மகன் இவர்களது வாழ்க்கையை மட்டும் சித்தரிக்கும் படமாக இதை எடுக்கிறார். மம்தா சங்கர் அவர் மனைவியாகவும், அனன்யா சட்டர்ஜி நடிகையாகவும் நடிக்கின்றனர்.
ரேயின் திரை அனுபவங்கள் முழுமையாக இந்தப் படத்தில் இருக்காது. அதை தனியாக எடுக்க வேண்டிய விஷயம் என்கிறார் ரிதுபர்னோ கோஷ்.
Comments


Click it and Unblock the Notifications