கஜினி விளம்பரம்: ரூ.50 லட்சம் கேட்டு ஆமீருக்கு நோட்டீஸ்!

By Staff

Amir Khan and Asin
கஜினி இந்திப் பட போஸ்டரில் இடம் பெற்ற செல்போன் நம்பரால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆமிர்கானுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

தமிழில் சூர்யா நடித்து வெளியான கஜினி படம் அதேபெயரில் ஆமீர் கான்-ஆசின் நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்கள் மும்பை மற்றும் முக்கிய நகரங்கள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

படத்தின் கதைப்படி, குறுகிய நேர நினைவிழப்பு நோய்க்கு ஆளானவராக ஆமிர்கான் நடித்திருப்பார். தான் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் மற்றும் நபர்களின் பெயர்களை உடலில் எழுதி வைத்திருப்பார்.

அப்படி எழுதப்பட்ட ஒரு நம்பர் சர்ச்சையை கிளப்பியது. அந்த செல் நம்பர், டாக்டர் சுரேகா வர்மா என்பவருடையது. இந்த போஸ்டரை அடுத்து அவருக்கு ஏகப்பட்ட போன் கால்கள் வர அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கஜினி படக்குழுவிடம் கேட்டபோது, 'ஏதாவது ஒரு நம்பர் என்கிற மாதிரி எழுதினோம். அது சுரேகாவினுடைய எண் என்பது தெரியாது' என்று விளக்கம் கூறி வருத்தம் தெரிவித்தனர்.

இப்போது இதே போல, போஸ்டரில் இடம்பெற்றுள்ள வேறொரு எண் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த எண் திரிலோசன் சிங் என்ற தொழில் அதிபருடையது. அந்த நம்பருக்கு ரசிகர்களிடமிருந்து ஏராளமான அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்களும் குவிந்த வண்ணம் உள்ளனவாம். இதனால் சிங்குக்கு பிபி எகிறிவிட்டதாம்.

இதையடுத்து ஆமீர்கானுக்கு அவரது சார்பில் ரிஸ்வான் சித்திக் என்ற வக்கீல் அனுப்பிய நோட்டீஸில், ஏற்கெனவே ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் திரிலோசன் சிங். இப்போது தேவையில்லாத போன் அழைப்புகள் வருவதால் மேலும் பாதிப்படைந்து தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் அவஸ்தைப் படுகிறார். அதற்கு நஷ்டஈடாக ஆமிர்கான் ரூ.50 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த நேட்டீஸைக் கண்டு கடும் ஆத்திரமடைந்துள்ள ஆமீர்கான், படத்தின் விளம்பர டிசைன்களை உடனே மாற்றுமாறு டிசைனருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X