நயன்-விஷால் பட சாதனை

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழ் ஆடியோ உரிமை மட்டும் ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், தெலுங்கு உரிமையை ரூ.1 கோடிக்கு ஆதித்யா நிறுவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதில் கைமாறிய தொகை எவ்வளவு என்பதை இரு நிறுவனங்களுமே வெளியிடவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 25 வது படம் இது என்பதால், பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்துள்ளதாம். எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் பல நிறுவனங்களும் சத்யம் ஆடியோவை வாங்க போட்டியிட்டன. அதில் அய்ங்கரன் வென்றுள்ளது.
இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் ஆகியோரது படங்களின் ஆடியோவுக்குத்தான் இவ்வளவு பெரிய விலை தரப்படுவது வழக்கம்.
இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் வகையில் இம்மாதம் 18-ம் தேதி மிகப் பெரிய அளவில் சத்யம் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications