குடும்பப் பாங்கான ஷகீலா

கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் கர்க்கலா ரவுடி. இப்படத்தை இப்போது தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள். புலிப்பாண்டி என்ற பெயரில் டப் ஆகும் இப்படத்தில் ஷகீலா குடும்பப் பாங்கான ரோலில் நடித்துள்ளாராம்.
ஷகீலா முன்பு போல இப்போது கவர்ச்சிகரமாக நடிப்பதில்லை. லேசு பாசான கவர்ச்சிக்கு மட்டுமே தலையாட்டுகிறார்.
இந்த நிலையில்தான் கர்க்கலா ரவுடி படத்தில் குடும்பப் பாங்கான ரோல் வந்தது. சந்தோஷத்துடன் ஏற்று சிறப்பாக நடித்துள்ளாராம் ஷகீலா.
இப்படத்தின் நாயகன் வினோ பிரபாகர். நாயகியாக தீபா நடித்துள்ளார். சில மாற்றங்களுடன் இப்படத்தை புலிப்பாண்டி என்ற பெயரில் டப்பிங் செய்து தமிழில் ரிலீஸ் செய்கிறார்களாம்.
More from Filmibeat
கன்னடம் கர்கலா ரவுடி குடும்பப் பாங்கு கேரக்டர் சினிமா தமிழ் புலிப்பாண்டி ஷகீலா cinema homely role karkala rowdy puli pandi shakeela


Click it and Unblock the Notifications











