குசேலனில் 'நடித்த' சவுந்தர்யா!

உடனே நீங்கள் வேறு கற்பனைகளுக்குப் போய்விடாதீர்கள்.
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் துணை நிற்கும் டெக்னீஷியன்களில் ஒருவராக அவர் தோன்றுகிறார்.
தமிழ் சினிமா தோன்றி 75 ஆண்டுகளாவதை பெருமைப்படுத்தும் விதத்தில் குசேலனில் ஒரு பாடல் வருகிறது. சினிமா சினிமா... எனத் துவங்கும் இந்தப் பாடலில் நிஜமான சூப்பர்ஸ்டாராகவே தோன்றுகிறார் ரஜினி. பாடலின் நடுவே, திரைப்படத்தை உருவாக்க திரைக்குப் பின்னாலிருந்து செயல்படும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் காட்டுகிறார்கள். அதில் இரு காட்சிகளில் சௌந்தர்யா ரஜினி, தனது ஆக்கர் ஸ்டுடியோவில் அமர்ந்து குசேலனுக்கு கிராபிக்ஸ் செய்வது போலத் தோன்றுகிறாராம்.
முதலில் இக்காட்சிகளில் தோன்ற மாட்டேன் என கண்டிப்பாகக் கூறிவிட்டாராம் சவுந்தர்யா. பின்னர் வாசு கஷ்டப்பட்டு சவுந்தர்யாவை சம்மதிக்க வைத்தாராம். ரஜினியே ஒரு கட்டத்தில், 'என்னப்பா, சவுந்தர்யா கால்ஷீட்டை போராடி வாங்கிட்டே போலிருக்கு...!' என வாசுவிடம் கிண்டலடித்தாராம்.
ஹீரோயினா எப்ப கால்ஷீட் தரப்போறீங்க மேடம்...?


Click it and Unblock the Notifications











