'தக்காளி'க்கு திடீர் கட்!

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாக நடித்து வரும் படம் சற்று முன் கிடைத்த தகவல். திகில் படமான இதை தக்காளி சீனிவாசன் இயக்கி வந்தார்.
இவர் ஏற்கனவே சில திகில் படங்களை இயக்கியவர். படம் முக்கால்வாசி முடிந்து விட்டது. இந்த நிலையில் திடீரென தக்காளி சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், புவன கண்ணன் என்பவர் இயக்கி வருகிறாராம்.
இதுவரை எடுத்த காட்சிகளில் சிறிய மாற்றம் செய்து தனது ஸ்டைலில் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் புவன கண்ணன்.
இப்படம் பாலியல் சித்திரவதைக்கு ஆளாகும் பெண்கள் குறித்த கதையாம். இதில் அம்முவாகிய நான் நாயகி பாரதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
குஷ்பு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தை பொங்கலுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென இயக்குநரை மாற்றி விட்டதால் பொங்கல் தாண்டித்தான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











