கமலுடன் தமன்னா?-தயாரிப்பு உதயநிதி??

ஸ்டாலினின் மகனான உதயநிதி தந்தை, தாத்தா வழியில் அரசியலுக்கு வராமல் திரைப்படத் துறைக்குத் தாவி விட்டார். ரெட் ஜயன்ட் மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இதுவரை குருவி, ஆதவன் என இரு படங்களைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மூன்றாவது படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் படமாக்க விரும்பிய அவர் கமல்ஹாசனையும், கே.எஸ்.ரவிக்குமாரையும் நாடியுள்ளார். இருவரும் இணைந்து உதயநிதிக்காக ஒரு படம் செய்து தர ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
கமலும், ரவிக்குமாரும் இதற்கு முன்பு கொடுத்த அத்தனை படங்களும் அலேக் ஹிட் படங்கள் என்பதால் இந்தப் படமும் ஹிட் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே வந்து விட்டதாம்.
இந்தப் படத்திலும் காமெடியில் கலகலக்க வைக்கப் போகிறார்களாம் கமலும், ரவிக்குமாரும். வழக்கம் போல வசனத்தை கிரேசி மோகன் எழுதக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை விட முக்கியமாக கமல்ஹாசனின் ஜோடியாக தமன்னா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
விரைவில் முறைப்படி முழு விவரங்களையும் சொல்வார்கள் எனத் தெரிகிறது.
சன் மூவிஸ் படத்தில் ரஜினி, ஸ்டாலின் மகன் தயாரிப்பில் கமல். இது போட்டி..!


Click it and Unblock the Notifications











