twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பருத்திவீரனால் மாறிய டி.ஆர்!

    By Staff
    |

    T.Rajender with Mumtaj
    ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர்.

    பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர்.

    இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம்.

    இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது:

    லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. ஒருதலைக் காதல்' என்று பெயர் வைத்திருக்கிறேன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறேன். இதில் குறளரசன் நாயகனாக நடிக்கவில்லை.

    நான்தான் நாயகன். மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகப் போகிறார்கள்.

    இது கிராமத்துக் காதல் கதை. என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் செட் போடாமல் இந்தப் படத்தை எடுக்கப்போகிறேன். இதில் கருப்பசாமி என்ற கிராமத்து மனிதராக வேடம் எனக்கு.

    இந்தப் படத்தை எனக்கு தூண்டுதலாக அமைந்தது அமீரின் பருத்தி வீரன்' திரைப்படம்தான். அந்தப் படத்தின் பாதிப்பிலிருந்து மீண்டு வரவே பல நாட்களாயிற்று. எடுத்தால் இப்படிப்பட்ட அர்த்தமுள்ள இயல்பான படங்களைத்தான் இனி எடுப்பது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.

    பருத்திவீரனைப் பார்த்த பிறகு மனம் மாறி ஒரு கிராமத்துப் படம் எடுக்கிறேன் என்று நான் சொன்னதால் எனக்கு எந்தவித குறையும் வந்துவிடவில்லை. பெருமைப்படுகிறேன்...என்றார் ராஜேந்தர்.

    தைரியமான மாற்றம் தான்..

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X