முதலமைச்சர் திருமாவளவன்

அரசியல் களத்தை அணல் களமாக ஆக்கிக் கொண்டுள்ள திருமாவளவன் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்புக் களத்திற்குப் பாய்ந்தார். அன்புத்தோழி என்ற படத்தில் புரட்சி வீரனாக அவர் நடித்தார்.
இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகானின் என்னைப் பார் யோகம் வரும் படத்தில் ஒரு பாடல் காட்சியில்தோன்றினார். இந்த நிலையில் தற்போது தனி ஹீரோவாக மின்சாரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் முதல்வர் வேடத்தில் வருகிறாராம் திருமா. இந்தப் படத்தின் பிற கலைஞர்கள் யார் என்பது குறித்து விரைவில் முழுத் தகவலையும் வெளியிடவுள்ளனராம்.
அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத இரு துறைகள். அரசியலுக்கு வந்த பலர் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான் என்கிறார் திருமாவளவன்.
முதல்வர் வேடத்தில் நடிக்கும் திருமா. முதல்வர் பதவிக்கு குறி வைக்கிறாரா?


Click it and Unblock the Notifications











