நடிக்காத படத்தில் நான்!-வடிவேலு புகார்!!

தினமும் குறைந்தது 3 படங்களின் சூட்டிங்குகளில் தலையைக் காட்ட வேண்ட அளவுக்கு மனிதர் மிக பிஸி.
இப்போது ஒரே நேரத்தில் வெடிகுண்டு முருகேசன், அழகர்மலை, சேவல், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குசேலன் உள்பட ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந் நிலையில் தான் நடிக்காத ஒரு படத்தில் நடித்ததாக விளம்பரம் கொடுத்து மோசடி நடந்துள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் வடிவேலு.
அவர் அளித்துள்ள புகாரில்,
பச்சை நிறமே' என்ற படத்தில் நான் நடித்திருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை. பணமும் வாங்கவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது ஏற்கனவே நான் நடித்த பழைய படங்களில் இருந்து காட்சிகளை எடுத்து இணைத்து புதிய காமெடியாக உருவாக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
நடிக்காத படத்தில் நான் நடித்ததாக விளம்பரப்படுத்தியது மோசடி செயலாகும். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புகாரை நடிகர் சங்கம் தவிர தயாரிப்பாளர் சங்கத்துக்கும் சி.சி. போட்டுள்ளார் வடிவேலு.
உக்காந்து யோசிப்பாங்களோ..


Click it and Unblock the Notifications











