விக்ரம் படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்ரம் குமார்!

இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த ராஜகாளியம்மன் மீடியா மோகன் நடராஜன் இதனை அறிவித்துள்ளார்.
24 என்ற படத்துக்காக விக்ரமை வைத்து ஒரு வாரம் படப்பிடிப்பையும் நடத்தினார் இயக்குநர் விக்ரம் குமார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வைத்த செலவைப் பார்த்து மிரண்டுபோன தயாரிப்பாளர் இனி இந்தப் படமே வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம்.
இந்தப் படத்துக்காக விக்ரம் குமாரிடம் ஒழுங்கான ஸ்க்ரிப்ட் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள மோகன் நடராஜன், இப்போது அதே விக்ரம்- இலியானா ஜோடியுடன் வேறு படத்தைத் துவங்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். ஆக்ஷனும் காமெடியும் கலந்த அசத்தல் கதையாம் இது. சாமி படத்துக்குப் பிறகு இதில் மீண்டும் போலீஸ் வேடம் ஏற்றுள்ளார் விக்ரம்.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.


Click it and Unblock the Notifications











