கீர்த்தியை புகழ்ந்த விவேக்!

மும்பையிலிருந்து வரும் பெரும்பாலான நடிகைகள் சேட்டுத் தமிழில்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு போன்ற ஒரு சிலர்தான் நல்ல தமிழில் பேச முயற்சித்து, பேசவும் செய்கிறார்கள்.
அந்த வகையில் கீர்த்தி சாவ்லா இப்போது நல்ல முறையில் தமிழில் பேச முயற்சிக்கிறார். முடிந்தவரை தமிழிலேயே பேசவும் செய்கிறார். இதைத்தான் விவேக் பாராட்டியுள்ளார்.
அந்தோணி யார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீர்த்திக்கு புகழாரம் சூட்டினார் விவேக். அவர் பேசுகையில், எப்போதுமே தமிழில் பேச வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர் கீர்த்தி சாவ்லா. தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த விழாவாக இருந்தாலும் சரி தமிழிலேயே பேச முயற்சிக்கிறார்.
அவருடைய தமிழ் இன்னும் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட அவரது உறுதியை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும் என்று பாராட்டித் தள்ளினார்.
விவேக்கின் புகழாரத்தைக் கேட்டு அவருக்கு அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி சாவ்லாவின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்பின் பிரகாசத்தைக் காண முடிந்தது.


Click it and Unblock the Notifications











