ஜனனி-கிருஷ்ணாவின் அலிபாபா ஆடியோ

இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை, பட்டியல் சேகர் தயாரித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல, விஷ்ணுவர்தன் மற்றும் கிருஷ்ணாவின் தந்தை.
கால்சென்டர் மற்றும் ஐடி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகி புதுமுகம் ஜனனி. இவரது இயற்பெயர் ஷெரீன். ஜில்லென்று இருக்கிறார். அலிபாபாவுக்காக ஜனனி என அவதாரம் எடுத்துள்ளார். பாட்டியாலாவைச் சேர்ந்த மாடல் கிளி. அலிபாபா, ஜனனிக்கு முதல் படம்.
விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக இருந்த நீலன் கே. சேகர் அலிபாபாவை இயக்கியுள்ளார்.
நடிகர்கள் ஆர்யா, பரத், இயக்குநர்கள் தரணி, விஷ்ணுவர்தன், ராஜா, மனோபாலா, தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன் ஆகியோர் கூட்டாக இந்தப் படத்தின் ஆடியோவை வெளியிட்டனர்.
முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன.-


Click it and Unblock the Notifications











