twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்களுக்கான பாரதிராஜா விரதம்; கருணாநிதிக்காக கலைப்பு!

    |

    Bharathiraja with Karunanidhi
    ஈழத் தமிழருக்காக மவுனம் காத்தேன்; கருணாநிதிக்காக இப்போது என் மவுனத்தைக் கலைக்கிறேன் என்று பேசியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

    கடந்த மக்களவைத் தேர்தலில் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தவர் பாரதிராஜா. திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக தேர்தலின் போது தீவிர பிரச்சாரமும் செய்தார். இவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குநர்கள் பிரச்சாரக் களத்தில் இறங்கினர்.

    ஆனால் திமுக அணியே பெரும்பாலான இடங்களை வென்றது. அதன் பிறகுதான் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது.

    அதைக் கண்டித்துப் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்ததும், அந்த வழக்கில் அவர் ஆஜராகி வருவதும் அனைவரும் அறிந்ததே.

    இதனால் எந்த மேடையிலும் பேசுவதில்லை, மவுன விரதம் அனுஷ்டிக்கப் போவதாக அறிவித்திருந்தார் பாரதிராஜா.

    தற்போது திடீரென தனது உண்ணாவிரதத்தைக் கலைத்து விட்டார் பாரதிராஜா.

    இதுகுறித்து சென்னையில் நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாநாட்டில் அவர் பேசுகையில்,

    "ஈழத் தமிழருக்காக மவுனம் காத்தேன். கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன். இதற்கு காரணம் அவர் மீது கொண்ட அன்புதான். இது அவருக்குப் புரியும்.

    அவருக்கும் எனக்கும் தந்தை, மகன் உறவு. மகன் மீது அவருக்கு கோபம் இருக்கலாம். அது பற்றி அவரிடம் நான் தனியாக பேசி தீர்த்து கொள்வேன். உலக தமிழர்கள் நீங்கள் நிறைய செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X