twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய்பாபா சிலைக்கு முத்தம்... காட்சியை வெட்டிய சென்சார்

    By Staff
    |

    Radhika with Vijith in Raghavan
    ஷீரடி சாய்பாபா சிலையை கதாநாயகி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல படமாக்கப்பட்ட காட்சியை வெட்டியது சென்சார் போர்டு.

    அகினா புரொடக்ஷன்ஸ் தயாக்கும் படம் ராகவன்.

    இதில் புதுமுகம் விஜித் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவர், ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். கதாநாயகியாக ராதிகா மல்கோத்ரா அறிமுகம் ஆகிறார். இவர், நடிகை நமீதாவின் உறவுக்காரப் பெண்.
    செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த பரந்தாமன், இந்த படத்தை இயக்குகிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

    படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், ஒரு காட்சியை மட்டும் கடுமையாக ஆட்சேபித்தார்கள்.

    கதாநாயகி ராதிகா மல்கோத்ரா, ஷீரடி சாயபாபாவின் சிலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சி அது. அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழுவினர் கூறினார்கள்.

    தயாரிப்பாளர் எம்.செல்வராஜ், இயக்குநர் பரந்தாமன் ஆகியோர் சம்மத்துடன் அக்காட்சி வெட்டப்பட்டது.

    இதுபோன்ற தேவையில்லாத காட்சிகளை வைக்காதீர்கள் என்றும் அறிவுரை கூறினார்களாம். இருவரும் சம்மதித்ததால், அந்த காட்சியை தணிக்கை குழுவினர் வெட்டி எறிந்தார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X