சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா

மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகமும் , இந்திய-இஸ்ரேல் நட்பு சங்கம், சென்னை திரைப்பட சங்கம் மற்றும் இந்தியன் சினி அப்பிரிஷியேசன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
விழாவின் முதல் நாளில், அதாவது 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு, கலாசார வேறுபாடுகளை தகர்த்தெறியும் இரு நண்பர்களுக்கு இடையிலான நட்பினை பாராட்டும் 'டர்ன் லெப்ட் அட் தி என்ட் ஆப் தி வேல்ர்டு' என்ற படம் திரையிடப்படுகிறது.
17ம் தேதி காணாமல் போன குழந்தையை நாயின் துணையுடன் தேடும் சிறுமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'சம் ஒன் டு ரன் வித்' என்ற படம திரையிடப்படும்.
18ம் தேதி மாலை 6.30க்கு எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, ஆனால் போதிய நேரம் கிடைக்காமல் அவதிப்படும் ஒரு பெண்ணை குறித்த 'அவிவா மை லைவ்' என்ற படமும், அன்று இரவு 8.00 மணிக்கு 'பிக் ஐய்ஸ்' என்ற படமும், கடைசி நாளான 19ம் தேதி 'கொலம்பியன் லவ்' என்ற காதல் கதையை கொண்ட படமும் திரையிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications











