twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் இஸ்ரேல் திரைப்பட விழா

    By Staff
    |

    Sarah and Nicole in the Turn left at the end of the world
    சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட சங்க அரங்கில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இஸ்ரேல் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.

    மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகமும் , இந்திய-இஸ்ரேல் நட்பு சங்கம், சென்னை திரைப்பட சங்கம் மற்றும் இந்தியன் சினி அப்பிரிஷியேசன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

    விழாவின் முதல் நாளில், அதாவது 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு, கலாசார வேறுபாடுகளை தகர்த்தெறியும் இரு நண்பர்களுக்கு இடையிலான நட்பினை பாராட்டும் 'டர்ன் லெப்ட் அட் தி என்ட் ஆப் தி வேல்ர்டு' என்ற படம் திரையிடப்படுகிறது.

    17ம் தேதி காணாமல் போன குழந்தையை நாயின் துணையுடன் தேடும் சிறுமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'சம் ஒன் டு ரன் வித்' என்ற படம திரையிடப்படும்.

    18ம் தேதி மாலை 6.30க்கு எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, ஆனால் போதிய நேரம் கிடைக்காமல் அவதிப்படும் ஒரு பெண்ணை குறித்த 'அவிவா மை லைவ்' என்ற படமும், அன்று இரவு 8.00 மணிக்கு 'பிக் ஐய்ஸ்' என்ற படமும், கடைசி நாளான 19ம் தேதி 'கொலம்பியன் லவ்' என்ற காதல் கதையை கொண்ட படமும் திரையிடப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X