பாரதிராஜா மகள் திருமண வரவேற்பு-முதல்வர் வாழ்த்து!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேவி தங்கபாலு, பாஜாக பொதுச்செயலாளர் எச் ராஜா, அமைச்ர் ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் நெப்போலியன், ஸ்ரீகாந்த், நடிகை மீனா, பட அதிபர்கள் கோவைத்தம்பி, சித்ரா லட்சுமணன் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குநர் பாரதிராஜா, அவரது மைத்துனர் மனோஜ்குமார், பிஆர்ஒ நிகில் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
முன்னதாக கங்கை அமரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
Comments


Click it and Unblock the Notifications