'கலோனியல் கசின்ஸ்' கோலிவுட் விஜயம்

சரண் இயக்கும் மோதி விளையாடு படத்திற்கு லெஸ்லி - ஹரிஹரன் ஜோடிதான் இசையமைக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் - வினய் ஜோடி போட்டு நடித்துள்ளனர். படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. தயாரிப்புக்குப் பிந்தைய நகாசு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சரணைப் பொறுத்தவரை இந்தப் படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரி. முந்தைய படங்கள் அவருக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கவில்லை. எனவே மோதி விளையாடு மூலம் கோலிவுட்டில் விட்ட இடத்தைப் பிடிக்க தீவிரமாக இருக்கிறார் சரண்.
இதுதொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்தி்பின்போது, இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும். எனது திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும். இப்படி ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
தோல்விகளிலிருந்து நான் நிறையப் பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்திற்குப் பின்னர் நான் மோதி விளையாடுக்கு முன்பு, மோதி விளையாடுக்கு பின்பு என அறியப்படுவேன் என்றார்.
இப்படத்தில் காஜல் அகர்வால் இதுவரை இல்லாத அழகிய கோலத்தில் வருகிறாராம். படம் முழுக்க ரசித்துப் பார்க்கும் வகையில் மெனக்கெட்டு மெருகேற்றியிருக்கிறாராம் சரண்.
இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி போல, கலோனியல் கசின்ஸ் இசை ஜோடியும் புகழ் பெறும் என்றார்.


Click it and Unblock the Notifications











