மீன் சுமந்த தர்ஷனா!

பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி சரண் தயாரிக்கும் டம் குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையோரம் நடந்து வருகிறது. இப்படத்தை டைரக்டர் ராஜமோகன் இயக்குகிறார். கதாநாயகியாக ஆந்திராவை சேர்ந்த தர்ஷனா நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ராம் நடிக்கிறார்.
நேற்று மணப்பாடு கடற்கரையோரம் தர்ஷனா, கூடையில் மீன் சுமப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. படம் குறித்து டைரக்டர் ராஜ்மோகன் கூறியதாவது, என்னுடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம். நான் நாகர்கோவில் இந்து கல்லூரியில் எம்.ஏ வரலாறு படித்தேன்.
இந்த படத்தின் கதை அழுக்கான மனிதருக்குள் இருக்கும் அழகான காதலை பற்றியது. நான் தயாரிப்பாளர் எஸ்.பி சரனிடம் கதையின் பாதியை சொன்ன உடனே அவர் சம்மதம் தெரிவித்து விட்டார். அது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என்றார்.
தர்ஷனாவுக்கு பூர்வீகம் ஆந்திராவாம். டாக்டருக்குப் படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திராவை சேர்ந்திருந்தாலும் என்னுடைய குடும்பம் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் தான் உள்ளது. நான் இப்போது எம்.பி.பி.எஸ் படித்து வருகிறேன்.
நான் மீன் சுமக்கும் காட்சி இங்கு படமாக்கப்பட்டது. இப்போது என்னுடைய உடம்பெல்லாம் வீசும் மீன் வாடை தான் என்னை உலகறியச் செய்யும் உயர்ந்த வாசம் என நான் உணர்கிறேன் என்றார்.
நன்றாகவும் பேசுகிறார் தர்ஷனா.


Click it and Unblock the Notifications











