'பொட்டலம்' ரவுடி களஞ்சியம்!

By Staff

Prabhu with Roja in Mitta mirasu
பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம் படங்களின் இயக்குநர் மு.களஞ்சியம் 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு படம் இயக்குகிறார். படத்தின் பெயர் 'என் கனவு நீதானடி'. இந்தப் படத்தின் நாயகனும் இவரே. அதாவது வில்லத்தனம் காட்டும் நாயகனாம்.

'பொட்டலம்' ரவுடி என்ற பெயரில் ஒரு பெண் பித்தனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் களஞ்சியம்.

இதுகுறித்து களஞ்சியம் கூறுகையில்,

கடைசியா நான் இயக்கிய படம் மிட்டா மிராசு. அப்புறம் 7 வருஷம் படமே இயக்க முடியல. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனை வைத்து கலகம் என்று ஒரு படம் செய்து கொண்டு இருக்கிறேன்.

இப்போது நானே நாயகனாக நடித்து, இந்தப் புதுப்படத்தையும் இயக்குகிறேன்.

இதில் என் வேடம் பொட்டலம் ரவுடி. பொட்டலம்னா வேற ஒண்ணுமில்லீங்க... கஞ்சா! இந்த ரோலுக்கு வேற யாரையாவது போடலாமான்னு கூட யோசிச்சேன். ஆனா, இந்த நாயகனுக்கு கராத்தே நன்கு தெரிந்திருக்க வேண்டும். நான் ஏற்கெனவே கராத்தேவில் நல்ல பயிற்சி பெற்றுள்ளேன். எனவேதான் நானே நடித்துவிட முடிவு செய்தேன்.

இதில் இரண்டு கதாநாயகிகள். ஆனாலும் வழக்கமான காதல் கிடையாது. என்னுடன் மேலும் மூன்று முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

பல உயிர்களை பிழைக்க வைக்கும் ஒரு மகத்துவமான பணியில் இருக்கும் ஒரு பெண் டாக்டர், ஒரு உயிரைப் பறிக்க காரணமாகிறார். அதன் பின்னணிதான் கதை என்றார்.

படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு சிவசுந்தர். சிவகுரு பிலிம்ஸ் சார்பில் டாக்டர் எல்.சீனிவாசன் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு மார்ச் 25-ம் தேதி துவங்குகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X