இந்தியாவின் அவதார்! - எந்திரனுக்கு பாலச்சந்தர் பாராட்டு

By Chakra

Rajinikanth and K Balachandar
இந்தியாவின் அவதார் எந்திரன் என்றால் மிகையல்ல,என்று இயக்குநர் கே பாலச்சந்தர் கூறியுள்ளார்.

ரஜினி நடித்து வெளியாகியுள்ள எந்திரன் படம் பார்த்தபின் அப்படத்தின் இயக்குநர் ஷங்கரைப் பாராட்டி இயக்குநர் கே பாலச்சந்தர் எழுதியுள்ள கடிதம்:

ஒருவேளை இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினி, முதல்நிலை நாயகி ஐஸ்வர்யா ராய், ஏராளமான வாய்ப்பு வசதிகள் என அனைத்தையும் என்னிடம் கொடுத்து படமெடுக்கச் சொல்லியிருந்தால்கூட எந்திரனைப் போன்ற ஒரு படைப்பை தந்திருக்க முடிந்திருக்காது. ரசிகர்கள் கைத்தட்டும் விதமாக ஒரு படம் வேண்டுமானால் கொடுத்திருப்பேன். ஆனால் இப்படி ஒரு உலக சினிமாவை தந்திருக்க முடியாது.

கத்தியின் மேல் நடப்பதைப் போல, மிகத் திறமையாக பாலன்ஸ் செய்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.

ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன்.

எந்திரனை இந்தியாவின் அவதார் என்றும், உங்களை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும், சன் பிக்சர்ஸை இந்தியாவின் எம்ஜிஎம் என்றும் கூறுவதில் மிகையொன்றுமில்லை, என்றே நினைக்கிறேன்.." என்று எழுதியுள்ளார் அந்தக் கடிதத்தில்.

இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், என் வாழ்க்கையில் நான் பெற்ற முக்கிய பாராட்டு இது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X