50வது ஆண்டில் சென்னை திரைப்பட கல்லூரி!
சென்னை திரைப்பட கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடக்கிறது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி, இயக்கம் மற்றும் கலை உணர்வுகளை ஆகியவற்றை வளர்க்கும் தனிச்சிறப்பு மிக்க கல்லூரியாக இது திகழ்கிறது.
இந் நிறுவனத்தில் திரைப்பட இயக்குனர் பயிற்சி மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதல், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஒலிப் பொறியியல், படத் தொகுப்பு உள்ளிட்ட பட்டயப் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்பட கல்லூரியின் 50வது ஆண்டு துவக்க விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை தரமான திரைப்படங்களை நோக்கி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் குகநாதன், இயக்குனர்கள் ராதாமோகன், சசிகுமார், ப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை திரைப்படக் கல்லூரி டிடிஎஸ் திரையரங்கில் நடக்கும் விழாவில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், நடிகை ஸ்னேகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











