இலியானா, சார்மியின் 'ராக்கி'

தெலுங்கைக் கலக்கி வரும் இடையழகி இலியானா. அவருடையை இடத்தைப் பிடிக்க தெலுங்கில் கடும் போட்டியே நடக்கிறது. இருந்தாலும் இலியானாவின் இடை அளவுக்குக் கூட யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் இலியானாவின் வெற்றிக் கொடி வெகு உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது.
இலியானா நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன படம் ராக்கி. இதில் அவருடன் இணைந்து மிரட்டியிருப்பவர் சார்மி. இவருடைய கவர்ச்சிக்கு ஆந்திராவில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இவர்களுடன் சேர்ந்து ஹீரோவாக நடித்தவர் ஜூனியர் என்.டி.ஆர். நம்ம ஊர் சுஹாசினியும் படத்தில் இருக்கிறார்.
சூப்பர் ஹிட் ஆன ராக்கி இப்போது அதே பெயரில் தமிழுக்கும் மொழிமாற்றமாகி வருகிறது.
இலியானா, சார்மியை வைத்து தமிழிலும் சூப்பர் ஹிட் ஆக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் விரைவில் ராக்கி தமிழ் பேச வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications