விடுதலை வேள்வியில் வீர மங்கையர்

By Chakra

Mega TV
மெகா தொலைக்காட்சி எப்போதும் மகளிர் முன்னேற்றத்திற்காக அதிக கவனம் செலுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் நாட்டின் 64- வது சுதந்திர தினத்தினையொட்டி விடுதலை வேள்வியில் வீர மங்கையர் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல்வேறு பயனுள்ள நிகழ்சிகளை ஒளிபரப்பி வரும் மெகா தொலைக்காட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் அங்கம் வகித்த மங்கையரின் வீரதீர செயல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துரைக்கும்வன்னம், விடுதலை வேள்வியில் வீர மங்கையர் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட்-15 தேதி சுதந்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

நம் பாரத திருநாடு பலநூறு ஆண்டுகளாக மன்னர் ஆட்சிகளை கடந்து , 200 ஆண்டு காலம் நீடித்த அன்னியரின் ஆதிக்கத்தையும், காலணி ஆதிக்கத்தையும், எதிர்த்து விடுதலைப் போர் நடத்தி வெற்றி பெற்று உலகிற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து வருகிறது.

இந்தியர்கள் என்று பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ளும் நாம், சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்து 63 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

சும்மா வந்து விடவில்லை இந்த சுதந்திரம். எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடி, தங்களின் வாழ்வையே தியாகம் செய்து, உழைப்பையும், உதிரத்தையும், ஏன் தங்களின் இன்னுயிரையும் தியாகம் செய்து இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்துள்ளனர். இந்த போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தது ஆண்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான பெண்களும் வீர மரணமடைந்துள்ளனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது என்பதை விளக்கும் வகையில் பண்டைய காலத்தில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியார், நாட்டைக் காக்க புயலாய் மாறிய ஜான்சி ராணி, சுயாட்சிக்கு வித்திட்ட அன்னிபெசன்ட் அம்மையார், இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு, வாரிசு உரிமைக்காக போராடிய தில்லையாடி வள்ளையம்மை, இந்தியாவின் வல்லமையை உலகிற்கு உணர்த்திய அன்னை இந்திராகாந்தி ஆகியோரின் வீர தீர செயல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் எடுத்துரைக்கும்வன்னம் விடுதலை வேள்வியில் வீர மங்கையர் என்ற சிறப்பு நிகழ்ச்சியினை மெகா டிவியின் செய்திப்பிரிவு தயாரித்து வழங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X