நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்

நமீதா, நிலா நடிப்பில் ஜெகன்மோகினி ரீமேக் ஆகியுள்ளது. ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது.
தயாரிப்பாளர் சுரேஷ் ஆடியோவை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். நடிகர்கள் சரத்குமார், ராஜா, நடிகைகள் நமீதா, நிலா, தயாரிப்பாளர்கள் முரளி, அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நமீதா பேசுகையில், படத்தின் கதையை இயக்குநர் விஸ்வநாதன் என்னிடம் சொன்னபோது, இது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் நடிக்க ஆரம்பித்த பின்னர் அந்த சந்தேகம் போய் விட்டது என்றார்.
சரத்குமார் பேசுகையில், ஒரிஜினல் ஜெகன்மோகினி, ஜெயமாலினியின் சிறப்பான நடிப்பால் வெற்றி பெற்றது. அதேபோல, இந்த ஜெகன்மோகினியும், நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்றார்.
அபிராமி ராமநாதன் பேசுகையில், படத்தின் சில காட்சிகளை பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். ஹாரி பாட்டர், ஹாலிவுட் படங்களின் தரத்தில் அவை உள்ளன. தமிழ் சினிமாவின் தரத்தை இந்தப் படம் மேலும் உயர்த்தும் என்றார்.


Click it and Unblock the Notifications