மிடிஸ் ஈஸ்ட் போகும் ஜெய் ஹிந்த்!

சமீபத்தில் மலையாளத்தில் தொடங்கப்பட்ட சேனல்தான் ஜெய்ஹிந்த் டிவி. தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜெய்ஹிந்த் டிவி செல்லவுள்ளது.
இதுகுறித்து ஜெய்ஹிந்த் டிவி சானலின் தலைவர் விஜயன் தாமஸ் மற்றும் ஹசன் இதுகுறித்துக் கூறுகையில், துபாயில் உள்ள ரேடிசன் எஸ்.ஏ.எஸ். ஹோட்டலில் ஜூன் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஜெய்ஹிந்த் சானல் தொடங்கப்படவுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி சேனலை தொடங்கி வைக்கிறார். கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, நடிகர் திலீப், நடிகை கோபிகா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
தொடக்க விழாவின்போது இன்னிசை இரவு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் பிற வளைகுடா நாடுகளுக்கும் ஜெய்ஹிந்த் டிவிதனது ஒளிபரப்பை மேற்கொள்ளும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சேனலின் அலுவலகம் துபாய் ஸ்டுடியோ சிட்டியில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











