நவ்யாவுடன் 'சுப்ரமணியபுரம்' ஜெய்!

சென்னை 600028 படம்தான் ஜெய்யை தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அடையாளம் காட்டிய படம். இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சுப்ரமணியபுரம், ஜெய்யை பெரிய ஹீரோக்கள் வரிசையில் சேர்க்க அஸ்திவாரம் போட்டு விட்டது.
இதையடுத்து ஜெய்யைத் தேடி வாய்ப்புகள் ஜே ஜே என ஓடி வரத் தொடங்கியுள்ளதாம். ஆனால் ஜெய் படு கவனமாக இருக்கிறார். நல்ல கதைகளாக தேடிப் பிடித்து ஒப்புக் கொண்டு வருகிறாராம். அப்படி அவர் ஒப்புக் கொண்டுள்ள படம்தான் அவள் பெயர் தமிழரசி.
இதில் நாயகி நவ்யா நாயர். கதையின் நாயகனாக வருகிறார் ஜெய். நவ்யா நாயரை மையப்படுத்திய கதை என்றாலும் கூட அவருடைய கேரக்டருடன் ஒட்டியபடியே ஜெய்யின் கேரக்டரும் பயணிக்குமாம். போட்டி போட்டு நடிக்க நல்ல வாய்ப்பு என்கிறார் ஜெய்.
மீரா கதிரவன் என்ற புதுமுக இயக்குநரின் கைவண்ணத்தில் உருவாகப் போகும் அவள் பெயர் தமிழரசி, ஜெய்க்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.
ஜெயிச்சுக்கிட்டே இருங்க ஜெய்!


Click it and Unblock the Notifications











