அஆஇஈ கமல் வெளியீடு

நிகழ்ச்சியில் ஏவிஎம் குமரன், அவரது மகனும் தயாரிப்பாளருமான ஏவிஎம் கே.சண்முகம், பிரபு, இயக்குனர் சபாபதி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ராமநாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
படத்தின் பாடல்கள் அருமையாக இருப்பதாகவும், இளைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் இருப்பதாகவும் கமல் பாராட்டினார். இந்த படத்தில் 6 பாடல்கள் உள்ளன. இதில் மேனா மினுக்கி பாடல் ஹிட் ரகம்.
ஏவிஎம் சரவணனின் இரண்டாவது அண்ணனான ஏவிஎம் குமரன், 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை தயாரித்துள்ளார். சூரக்கோட்டை சிங்கக்குட்டி இவரது தயாரிப்பில் பிரபலமடைந்த படம். அதன் பிறகு டிவி சீரியல்களை தயாரிப்பதில் இறங்கிவிட்டார் குமரன்.
அ ஆ இ ஈ குமரனுக்கு கொண்டாட்டமாக அமையட்டும்.
Comments


Click it and Unblock the Notifications