'கனிமொழி' ஆகும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

By Chakra

பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல, யுத்தம் செய், பொன்னர் சங்கர், திரு திரு திரு உள்ளிட்ட படங்கள் மூலம் களையான முகம் கொண்ட அம்மா வேடத்தில் நடித்து பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணனைத் தேடி வெயிட்டான கதாபாத்திரம் ஓடி வந்துள்ளது.

அது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திஹார் சிறையில் அடைபட்டுள்ள கனிமொழி கதாபாத்திரம்.

தமிழ் சினிமாவில் இப்போது வயதான அம்மாக்களுக்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. மனோரமா போன்றோர்கள் கோலோச்சி வந்த அம்மா கேரக்டர்களில் இப்போது இளம் வயதுடைய நடிகைகள்தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அம்மா நடிகைகளில் ஒருவர்தான் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன். அடிப்படையில் மலையாளியான லட்சுமி, தமிழ் சினிமாவின் இளம் நாயகர்களின் அம்மாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவுக்கு அம்மாவானார். யுத்தம் செய் படத்தில் மொட்டைத் தலையுடன் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடிப்பையாக வைத்து தயாரிக்கப்படவுள்ள புதிய படத்தில் கனிமொழி வேடத்தில் நடிக்க இவரைக் கேட்டுள்ளனராம்.

சூடான அரசியல் நிகழ்வுகளை சுடச் சுட படமாக்குவதில் தமிழ் சினிமாக்காரர்களும், தெலுங்குப் படத்துறையினரும் கில்லாடிகள். அந்த வகையில் இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை படமாக்கப் போகின்றனர்.

இதில் கனிமொழி வேடத்தில் நடிக்குமாறு லட்சுமி ராமகிருஷ்ணனை அணுகியுள்ளனராம். ஜான் மனோகர் என்ற பத்திரிக்கையாளர் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது.

இப்படத்தில் நீரா ராடியா வேடத்தில் மலேசிய நடிகை சாந்தினி நடிக்கவுள்ளார். இவர் சசிக்குமாரின் நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். ரியாஸ் கான், முன்னாள் அமைச்சர் ராசா வேடத்தில் வரப் போகிறாராம். காமடி நடிகர் செந்தில், சிங்கமுத்து ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனராம்.

அனேகமாக மு.க.அழகிரி வேடத்தில் சிங்கமுத்து நடிப்பார் என்று தெரிகிறது. சத்தியராஜை தலைமை தேர்தல் ஆணையர் வேடத்திற்குக் கூப்பிட்டுள்ளனராம்.

கனிமொழி வேடத்தில் நடிப்பது குறித்து லட்சுமி கூறுகையில், எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். இப்போது படத் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளேன். விரைவில் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்றார்.

இந்த வேடத்தில் நடிப்பதால் பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் ஒரு நடிகை. எந்த வேடத்தில் நடிப்பது என்பதி்ல எனக்குப் பிரச்சினை இல்லை. எனது பணி நடிப்பது என்றார் லட்சுமி புன்னகையுடன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X